மகரம் ராசி அன்பர்களே…!! இன்று செயலில் திறமை நிறைந்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மகிழ்வை கொடுக்கும். கூடுதல் வருமானம் கிடைக்கும். விருந்து விழாவில் கலந்துக் கொள்வீர்கள். அரசு சார்ந்த அனுகூலம் கிடைக்கும். இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல்கள் ஏற்பட்டு சரியாகும். பணவரவு தடைபட்டாலும் வந்து சேரும்.
வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் பொழுது ரொம்ப கவனமாக இருங்கள். உத்யோகஸ்தர்கள் அலுவலக பொருட்களை கவனமாக கையாள வேண்டும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள் நண்பர்களிடம் கோபத்தைக் காட்டாமல் பேசுவது நல்லது.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக்கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் :3 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள்