உக்ரைனில் இருந்து தெலுங்கானா திரும்பிய மாணவர்களின் கல்வி செலவு அனைத்தையும் அரசே ஏற்கும் என்று தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருவது 20-வது நாளாக தொடர்ந்து நீடித்துக் கொண்டுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா அதிக அளவு தாக்குதல் நடத்தி வருகின்றது ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏவுகணைகள் மூலம் ஆக்ரோஷமான தாக்குதல்களை ரஷ்ய படைகளின் மீது நடத்தி வருகின்றனர். உக்ரைனில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் வசித்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோனோர் மாணவர்கள். அங்கு ஏற்பட்ட போர் காரணமாக அவர்கள் அங்கிருந்து வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.
இதனால் அவர்களை மீட்க மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ எனும் திட்டத்தை தொடங்கி செயல்படுத்தி வருகின்றது. இந்நிலையில் மீட்கப்பட்ட மாணவர்களின் கல்வி கேள்விக்குறியானதால் அவர்களின் எதிர்கால நலனுக்காக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் மருத்துவம் படிக்க உக்ரேன் சென்ற தெலுங்கானா மாணவர்களின் படிப்புக்கான நிதியை அரசு வழங்கும் என தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.