Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேரனை பார்க்க சென்றவருக்கு…. வழியில் நடந்த விபரீதம்…. நாமக்கல்லில் கோர விபத்து….!!

பேரனை பார்ப்பதற்காக சென்ற ஆட்டோ டிரைவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் கருங்கல்பட்டியில் வசித்து வந்த நாகராஜன் என்பவர் ஆட்டோ டிரைவராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று நாமக்கல் மாவட்டம் புதன்சந்தையில் வசிக்கும் தனது பேரனை பார்ப்பதற்காக ஆட்டோவில் சென்றுள்ளார். இதனையடுத்து புதுசத்திரம் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த பொது ஆட்டோ திடீரென கட்டுபாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்துள்ளது.

இந்த கோர விபத்தில் நடராஜன் பலத்தகாயமடைந்து உயிருக்கு போராடினார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே நடராஜன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து புதுசத்திரம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |