விஜய்யின் பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படமொன்று வெளியாகி ரசிகர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருபவர் விஜய். இவர் தற்போது பீஸ்ட் படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். அண்மையில் வெளியான அரபிக் குத்து பாடல் ஹிட்டாகி அனைவரையும் முணுமுணுக்க செய்து வருகின்றது.
இந்நிலையில் பீஸ்ட் திரைப்படத்தின் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி உள்ளது. வெளியான இந்த புகைப்படத்தில் விஜய் மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அப்டேட்டுக்காக காத்து இருந்த ரசிகர்கள் மத்தியில் தற்போது இந்த புகைப்படம் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.