சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு காவல்துறையினர் சார்பில் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணை கண்காணிப்பாளர், நகர் காவல் ஆய்வாளர் சரவணன், ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சிவம், முனியாண்டி ரமேஷ் , ரேக்ஸ், போக்குவரத்து துறை சார்பாக அலுவலர்கள், காவல் துறையினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதன் பின்னர் தலைக்கவசம் அணிய வேண்டும், இருசக்கர வாகனங்களில் இரண்டு பேருக்கு மேல் பயணம் செய்ய வேண்டாம், செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை ஓட்டக் கூடாது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனத்தை ஓட்ட வேண்டாம், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும், வாகனம் ஓட்டும்போது புகைப்படம் பிடிக்க வேண்டாம், நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக சீட் பெல்ட் அணிய வேண்டும் என்று பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து துணை கண்காணிப்பாளர் ரமேஷ், ஆய்வாளர் சரவணன் மற்றும் காவல்துறையினர் விழிப்புணர்வு அடங்கிய துண்டுபிரசுரங்களை வாகன ஓட்டிகளிடம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தியுளனர்.