Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“சிலை முன்பு வைக்கப்பட்ட தலை” 5 வருடங்களுக்கு பிறகு பிரபல ரவுடி கைது…. போலீஸ் அதிரடி…!!

தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள‌ கீழ்பெரும்பாக்கம் பகுதியில் அறிவழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொலை, கொள்ளை, அடிதடி, கட்டப்பஞ்சாயத்து, வழிப்பறி போன்ற பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார். இவர் மீது காவல்துறையில் மொத்தம் 21 வழக்குகள் பதிவாகி இருக்கிறது. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டில் இருந்து கோர்ட்டில் ஆஜராகாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக அறிவழகனை  கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்பிறகு காவல்துறையினர் அறிவழகனை வலைவீசி தேடி வந்துள்ளனர். இந்நிலையில் கண்டமங்கலம்  காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை அறிவழகன் மிரட்டி பணம் பறித்துள்ளார். இதைப்பார்த்த காவல்துறையினர் அறிவழகனை விரட்டி பிடித்துள்ளனர். இதனையடுத்து அறிவழகனை விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் விராட்டிகுப்பம் பகுதியில் பிரபல ரவுடியான பத்தர் செல்வம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நகராட்சி பூங்காவில் இறகுபந்து விளையாடிக் கொண்டிருந்தார். அங்குசென்ற அறிவழகன் பத்தர் செல்வத்தின் தலையை அரிவாளால் வெட்டி காந்தி சிலையின் முன்னால் வைத்து எட்டி உதைத்தார். அதன்பிறகு விழுப்புரம் நகர காவல்துறையில் சரணடைந்தார். இந்த சம்பவம் கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |