கும்பம் ராசி அன்பர்களே…!! இன்று நல்லவர்களின் நட்பு மனநிறைவை கொடுக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் வளர்ச்சி ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். பெண்களுக்கு பொன் பொருள் சேரும். வாழ்வில் இனிய அனுபவம் ஏற்படும். இன்று இயந்திரங்களில் பணிபுரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாகச் செயல்படவேண்டும்.
குடும்பத்தில் இருப்பவர்கள் பேச்சுக்கு எதிர்த்துப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே வீண் வாக்குவாதங்கள் வந்து செல்லும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுங்கள்.எந்த ஒரு விஷயத்தையும் ரொம்ப கவனமாக மேற்கொள்ளுங்கள். கொடுக்கல் வாங்கலில் ரொம்ப கவனமாக இருக்கவேண்டும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து ஏதும் போடாதீர்கள். பணம் நான் வாங்கித்தருகிறேன் என்று பொறுப்பை ஏற்றுக்கொண்டு யாருக்கும் பணத்தை வாங்கிக் கொடுக்காதீர்கள்.
இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிறத்தில் ஆடை அணிந்து செல்லுதல் நல்லது. ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள் ரொம்ப சிறப்பாக நடக்கும்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண் :1 மற்றும் 3
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் ஆரஞ்சு