Categories
சினிமா செய்திகள் தமிழ் சினிமா

“பாலியல் பிரச்சினைகளை நானும் சந்தித்துள்ளேன்”… பிரபல நடிகை ஓபன் டாக்…!!!

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்த திவ்யா பேட்டியின்போது சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் எதற்கும் துணிந்தவன். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக பிரியங்கா அருள் மோகன் நடித்த இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்து இருக்கின்றது. எதற்கும் துணிந்தவன் படத்தில் முக்கிய வேடங்களில் சத்யராஜ், திவ்யா, வினய், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, சுப்பு பஞ்சு, தேவதர்ஷினி பலர் நடித்துள்ளனர். திவ்யா செய்தி வாசிப்பாளராக தன் கெரியரை தொடங்கி தற்போது இந்த படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் பேட்டி ஒன்றில் திவ்யா கூறியுள்ளதாவது, “காலேஜ் படிக்கும்போது ஒரு ஃபேனாக சூரிய சாரை பார்த்துள்ளேன். பிறகு தொகுப்பாளராக அவரை நான் சந்தித்தேன். இந்நிலையில் அவருடன் நடிக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கின்றது. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. படத்தின் ஷூட்டிங் ரொம்ப ஜாலியாக இருந்தது. எல்லா பெண்களுமே ஏதோ ஒரு வகையில பாலியல் ரீதியான பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்கள். அதை நானும் சந்தித்துள்ளேன். ஆனால் நான் அதை தைரியமாக கடந்து வந்திருக்கிறேன். யாரெல்லாம் தனக்கு நடக்கின்ற அத்துமீறல்களை வெளியே சொல்லாமல் இருக்கிறார்களோ அவர்களுக்குத் தான் மீண்டும் அத்துமீறல்கள் நடக்கின்றது. சூர்யா சார் மிகவும் நல்ல மனிதர் இவர் திரைக்குப் பின்னால் அவ்வளவு நல்ல விஷயங்களை செய்து வருகின்றார். சமுதாயத்தில் எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் குரல் கொடுக்கின்றார். அவர் என்னை பற்றி பேட்டியின்போது கூறியது மறக்க முடியாத தருணம்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |