Categories
மாநில செய்திகள்

அரசு ஊழியர்களுக்கு வெளியான செம ஷாக் நியூஸ்…. அரசு அலுவலகங்களில் அதிரடி கட்டுப்பாடு…!!!

அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு ஊழியர்களின் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது இயல்பான ஒன்றாக தற்போது மாறி வருகிறது. அந்த வகையில் அலுவலக நேரங்களில் செல்போனை பயன்படுத்துவது மற்றும் அதன் மூலம் வீடியோ எடுப்பது போன்றவை நல்ல நடவடிக்கை இல்லை. அந்த வகையில், திருச்சியில் உள்ள சுகாதார மண்டல அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றுபவர் ராதிகா. இவர் அலுவலக நேரங்களில் செல்போன் பயன்படுத்தியதுடன் உடன் பணிபுரிவோரை வீடியோ எடுத்ததன் புகாரின் பேரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதனை அடுத்து தனக்கு வழங்கப்பட்ட சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக்கோரி ராதிகா, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்க தொடர்ந்துள்ளார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது இதுபற்றி நீதிபதி கூறியுள்ளதாவது, மனுதாரர் பணியிடத்தில் தன்னுடன் பணிபுரிவோரை வீடியோ பதிவு செய்யக் கூடாது என பலமுறை எச்சரித்து வந்த நிலையில், தொடர்ந்து இதே போல் செய்த காரணத்தினால் அவருக்கு சஸ்பெண்ட் வழங்கி உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் அரசு தரப்பில், மனுதாரர் தொடர்ச்சியாக அதிகாரிகள் மற்றும் உடன் பணிபுரிபவருடன் முறையாக நடந்து கொள்ளவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த புகார் குறித்து விசாரிக்க நீதிமன்றம் விரும்பவில்லை என்று கூறியுள்ளது. மேலும் அலுவலக நேரங்களில் அரசு ஊழியர்கள் செல்போனை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் அப்படி அவசர தேவை என்றால் முறையான அனுமதி பெற்று செல்போன் பயன்படுத்த வேண்டும் .எனவே இதனை கருத்தில் கொண்டு,

1. அரசு ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது தொடர்பாகவும் அலுவலக நேரத்தில் செல்போன் மூலமாக எடுக்கப்படும் வீடியோக்களால் வன்முறை உள்ளிட்ட சம்பவங்கள் நிகழும் சூழலில் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்தும் அரசு ஊழியர் விதிப்படி வழிகாட்டுதல்களை பிறப்பித்து சுற்றறிக்கை அனுப்பப்பட வேண்டும்.

2. தமிழக சுகாதாரத்துறை செயலர், அரசு அலுவலர்கள் பணி நேரத்தில் செல்போன் பயன்படுத்துவது, செல்போன் கேமராக்களை பயன்படுத்தி வீடியோ எடுப்பது தொடர்பாக விதிகள் உருவாக்க வேண்டும். அலுவலக பயன்பாட்டுக்கு தனி செல்போன் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

3. இவற்றை தமிழக சுகாதாரத்துறை செயலர் 4 வாரங்களுக்குள்ளாக நடைமுறைப்படுத்த வேண்டும்.” இவ்வாறு நீதிபதி தெரிவித்துள்ளார்.

Categories

Tech |