Categories
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வு?…. வெளியாகப்போகும் குட் நியூஸ்?….!!!!

இந்தியாவில் கடந்த 2021 கொரோனா ஊரடங்கு காலத்தின்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. இதையடுத்து கொரோனா தாக்கம் மெல்ல மெல்ல குறைந்த பிறகு மத்தியஅரசு ஊழியர்களுக்களுக்கான அகவிலைப்படி உயர்வு அளிப்பது தொடர்பாக ஆலோசனை நடைபெற்றது. இதற்கிடையில் ஊரடங்குக்கு பின் அதிகரித்து வந்த விலைவாசிக்கு மத்தியில் அகவிலைப்படியானது அரசு ஊழியர்களுக்கு அவசிய ஒன்றாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2021 ஜூலை மாதம் 2 கட்டங்களாக அகவிலைப்படி உயர்த்தப்பட்டடு, தற்போது 31% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 50 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் 65 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். இதனிடையில் மத்திய அரசை போன்றே மாநில அரசு ஊழியர்களும் அகவிலைப்படி உயர்வுவேண்டி கோரிக்கை விடுத்து வந்தனர். அத்துடன் சம்பள உயர்வு தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகியது. அந்த அடிப்படையில் ஆந்திரா மாநிலத்தில் 23.29 சதவீதம் மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்பட்டது. அதனை தொடர்ந்தது மாநிலஅரசுகளும் அகவிலைப்படி(DA) உயர்வு அளித்தனர்.

இந்நிலையில் வரப்போகும் ஹோலிப் பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்பின்  7-வது ஊதியக்குழு பரிந்துரையின் அடிப்படையில் நிலுவையிலுள்ள அகவிலைப்படி, சம்பள உயர்வு, வீட்டு வாடகைப்படி உயர்வு ஆகியவைகளுக்கு இந்த வருடம் உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய அறிவிப்பின்படி அகவிலைப்படி 34 சதவீதம் ஆக உயர்த்தப்பட்டால், அடுத்தடுத்து மாநில அரசுகளும் தங்கள் ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தும். கொரோனா தொற்றால் பல்வேறு சலுகைகள் அரசு ஊழியர்களுக்கு கிடைக்காமல் இருக்கிறது.

Categories

Tech |