Categories
மாநில செய்திகள்

சென்னை டூ திருப்பதி ரயில் பயணிகளுக்கு ஷாக் நியூஸ்….தெற்கு ரயில்வே திடீர் அறிவிப்பு……!!!

தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை- திருப்பதி இடையே ரயில்களில் சில மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது. இதையடுத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் என ஒவ்வொன்றாகத் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. அந்தவகையில் இரவு ஊரடங்கும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு  ஊரடங்குகள் எல்லாம் தளர்த்தப்பட்டு அரசு அறிவிப்பை வெளியிட்டது. மேலும் இத்தளர்வுகளுக்கு விலக்கு அளித்த பின், பொதுப்போக்குவரத்து இயங்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை- திருப்பதி இடையே பயணம் செய்யும் ஏழுமலையான் பக்தர்கள் மற்றும் ரயில் பயணிகளை அதிர்ச்சியில் உறைய வைக்கும்  திடீர் அறிவிப்பு ஒன்றை தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, சென்னையில் இருந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு செல்பவர்களின் வசதிக்காக விரைவு ரயில்கள் ஆனது சென்னை- திருப்பதி இடையே இயக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த ரயில் சேவையானது கொரோனா  பாதிப்பின் காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. அதன் பின் ஏற்பட்ட ஊரடங்கு தளர்வுகளினால் அனைத்து ரயில் போக்குவரத்தும் தொடங்கியுள்ளது. அந்த வகையில் சென்னை- திருப்பதி இடையே ரயில் போக்குவரத்து தொடங்கி இயங்கி வருகிறது. மேலும் தற்போது சென்னை சென்ட்ரலில் இருந்து தினமும் திருப்பதிக்கு 2 எக்ஸ்பிரஸ் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதையடுத்து இந்த ரயிலின் இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட 5 பொது பெட்டிகள் திடீரென முன்பதிவு பெட்டிகளாக தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளன.

அவ்வாறு மாற்றம் செய்யப்பட்ட 2 எக்ஸ்பிரஸ் ரயில்களும் வருகிற 17-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இந்த அறிவிப்பில் மாற்றம் செய்து இந்த ரயில் சேவையானது, வருகிற 18-ஆம் தேதி முதல் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதனைத்தொடர்ந்து சென்னை – திருப்பதி இடையே இரு வழிகளிலும் செல்லும் பயணிகள் இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.மேலும் இந்த அதிரடி மாற்றத்தால் பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |