Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று(மார்ச்-16) முதல்…. 12-14 வயது சிறுவர்களுக்கு…. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

கடந்த 2 மாதமாக கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதன் காரணமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டதன் பயனாக தற்போது கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கிடையில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் நாடு முழுவதும் 12 முதல் 14 வயதான சிறுவர்களுக்கு இன்று (மார்ச்.16) முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளது. ஏற்கனவே 14 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் நிலையில், மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |