Categories
கரூர் மாவட்ட செய்திகள்

சிறப்பாக நடைபெற்ற பந்தயம்…. அலைமோதிய மக்கள் கூட்டம்…. கரூரில் பரபரப்பு….!!

மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயத்தை ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து கண்டுகளித்தனர்.

கரூர் மாவட்டத்தில் உள்ள மணத்தட்டை பகுதியில் வசிக்கும் மக்கள் சார்பாக மாட்டு வண்டி மற்றும் குதிரை பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்தப் பந்தயத்தில் தேன்சிட்டு எனப்படும் சிறிய மாடு, ஒற்றை மற்றும் இரட்டை மாடு, சிறிய குதிரை, பெரிய குதிரை எனத் தனித்தனியாக பந்தயம் நடத்தப்பட்டுள்ளது. இவை குளித்தலை-மணப்பாறை சாலையில் தொடங்கி வெற்றி இலக்கை நோக்கி குதிரைகள் மற்றும் மாடுகள் சீறிப்பாய்ந்து ஓடின.

இதனையடுத்து முதல் மூன்று இடங்களை பிடித்து வெற்றி பெற்ற குதிரை மற்றும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. இதில் திருச்சி, கரூர் உள்பட பல மாவட்டங்களில் வசிக்கும் நபர்கள் பங்கேற்றுள்ளனர். மேலும் இதைப் பார்ப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் அங்கு குவிந்துள்ளனர்.

Categories

Tech |