தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் திட்டத்தை திமுக தேர்தலின் போது அறிவித்திருந்தது. திமுகவின் இந்தத் தேர்தல் வாக்குறுதி பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. ஆனால் தேர்தல் முடிந்த ஆட்சிக்கு வந்தபின் தமிழக அரசால் இந்தத் திட்டத்தை செயல்படுத்த முடியவில்லை.
கொரோனா பரவல், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் தொடங்கப்படவில்லை. மக்கள் இடையே எப்போது இந்த திட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் இந்த திட்டம் குறித்த அறிவிப்பு வரும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.