பெயிண்டர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலத்தில் உள்ள கோதசிரா சாட்டேகான்பரப்பு ஹவுஸ் பகுதியைச் சேர்ந்தவர் சஜயன். இவர் கரூர் மாவட்டத்தில் உள்ள தளவாபாளையத்தில் வாடகை வீட்டில் அப்துல் நசீர், ராஜேஷ் மற்றும் ராஜேஷ் ஆகியோருடன் தங்கி ஒரு கம்பெனியில் பெயிண்டர் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் நண்பர்களுடன் சாப்பிட்டுவிட்டு சஜயன் தூங்கியுள்ளார். பின்னர் நண்பர்கள் எழுந்து பார்த்த போது சஜயன் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.