மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள வேட்டங்குடி கிராமத்தில் கூலி தொழிலாளியான ரத்தினம்- ஹேமா தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு நீகன்யா என்ற 2 வயது மகள் இருந்துள்ளார். இந்நிலையில் ரத்தினம் தனது வீட்டின் பின்புறம் உள்ள மின் விளக்கை எரிய வைப்பதற்காக மின் ஒயரை சரி செய்து கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ரத்தினத்தின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதனை பார்த்த அவரது மனைவி ஹேமா மற்றும் குழந்தை நிகன்யா இருவரும் ரத்தினத்தை காப்பாற்ற முயன்றுள்ளனர். அப்போது அவர்களையும் மின்சாரம் தாக்கியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ரத்தினம், ஹேமா, நிகன்யா ஆகிய 3 பேரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.