பாலாவின் அடுத்த திரைப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்க உள்ளார்.
நடிகை கீர்த்தி ஷெட்டி உப்பேனா தெலுங்கு திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இவரின் முதல் படமே 100 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோயினுக்கு அப்பாவாகவும் வில்லனாகவும் நடித்திருந்தார் குறிப்பிடத்தக்கது. இவரின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருந்தாராம். ஆனால் தெலுங்கில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்ததால் விஜய் சேதுபதி, மகளாக நடித்தவர் உடன் எப்படி ஜோடியாக நடிக்க முடியும் என மறுத்துவிட்டாராம்.
தற்போது பாலா இயக்கும் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் 18 வயதாகும் கீர்த்தி ஷெட்டி இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளார். பாலா ஹீரோயினை கருப்பாக்கி காட்டுவாரு, கீர்த்தியை என்ன செய்யப் போகிறாரோ என்று ரசிகர்கள் கருத்துக்களை கூறி வருகின்றனர்.