90’களில் முன்னணி நடிகர்களுடன் நடித்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் சிம்ரன்.
தமிழ் சினிமா உலகில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் சிம்ரன். இவர் விஜய் சிவாஜி நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானார். இவர் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜீத், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் அந்த காலகட்டத்தில் அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்து பிரபல நடிகையாக வலம் வந்தார். சிம்ரன் உச்ச நடிகையாக வலம் வந்தபோது அப்பாசுடன் கிசுகிசுப்பு பேசப்பட்டது.
இதற்கு பதிலளித்த சிம்ரன் சினிமாவிற்கு வருவதற்கு முன்பு இருந்தே நாங்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என்று கூறியிருந்தார். மேலும் பல திரைப்படங்களில் நடித்து அதன்பிறகு கல்யாணம் செய்து கொண்டு மகிழ்ச்சியாக திருமண வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்று கூறினார். அதுபோன்ற 2003-ஆம் வருடம் தனது சிறுவயது நண்பரான தீபக்கை கல்யாணம் செய்து கொண்டார். இப்போது இந்த தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள் குறிப்பிடத்தக்கது.