கடந்த மாதம் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக கொங்கு மண்டலத்தில் வெற்றிக் கொடியை நாட்டியது. 2021 தேர்தலில் செல்வாக்கை இழந்த கொங்கு மண்டலத்தில் கூட திமுக இமாலய வெற்றி பெற்றது இது மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இந்நிலையில் கோவையில் மேயரை தேர்ந்தெடுப்பது குறித்து பல்வேறு கோணங்களில் போட்டிகள் இருந்தன. குறிப்பாக 3 முக்கியமான நிர்வாகிகள் பெயர் இதில் அடிபட்டது. அதில் முன்னாள் எம்எல்ஏ கார்த்திக், மருதமலை சேனாதிபதி, மீனா லோகு ஆகிய குடும்பத்தை சேர்ந்த பெண்களின் பெயர்கள் அடிபட்டன. இதில் கார்த்திக் குடும்பம் ஏற்கனவே எம்எல்ஏ பதவியை அனுபவித்து விட்டது. அடுத்தது மீனா லோகு இவரைப் பொறுத்தவரை இவர்கள் முன்னாள் எம்எல்ஏ வேலுமணிக்கு நெருக்கமாக இருந்ததாக கூறப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் இவர்களுக்கு கோவையில் நல்ல பெயர் இல்லை எனவும் கூறப்பட்டது. எனவே இவரை மேயராக தேர்ந்தெடுப்பதற்கு ஸ்டாலின் மறுப்பு தெரிவித்து விட்டாராம். உடனடியாக முதல்வரின் கவனம் கல்பனா பக்கம் திரும்பியுள்ளது. அவருடைய மாமனார் மிசா காலத்தில் இருந்து சிறைக்கு சென்றவர். கட்சிக்காக உழைத்த ஒரு நல்ல குடும்பம் கல்பனாவின் குடும்பம். அதுமட்டுமல்லாமல் எளிய குடும்பத்திலிருந்து வந்த கல்பனா மேயர் பதவி கொடுக்கப்படும் பட்சத்தில் கட்சிக்காக தீவிரமாக உழைப்பார் என ஸ்டாலின் எண்ணியுள்ளார். ஏற்கனவே மேயர் பதவிக்கு பரிசீலிக்கப்படும் சிலர் சென்னையில் ஸ்டாலினை சந்தித்தார் ஆசி பெற்றுள்ளனர்.
அப்போது கல்பனாவிடம் முதல்வர் ஊருக்கு போங்க நல்ல செய்தி வரும் என்று கூறினாராம். மேயர் பதவி குறித்த அறிவிப்பு தான் அது. தொடர்ந்து கல்பனாவிற்கு மேயர் பதவி கிடைத்துள்ளது. இதைத்தான் ஸ்டாலின் சூசகமாக சொல்லியுள்ளார் என்பதை பிற்காலத்தில் கல்பனா புரிந்து கொண்டாராம். இந்த செய்தி தற்போது வெளியாகி வைரலாக பரவி வருகிறது.