இன்று இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்த போவதாக நகர மேயர் அறிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது 20-வது நாளாக போர் தொடுத்து வரும் நிலையில் பல்வேறு நாடுகள் இந்த போரினை நிறுத்த முயற்சித்து வருகின்றனர். இந்த நிலையில் ரஷ்யா தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதற்கு முன்னேறி வருகிறது. மேலும் ரஷ்ய படைகள் பள்ளிக்கூடங்கள், பொது மக்கள் குடியிருப்புகள், மருத்துவமனைகள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையில் கீவ் தலைநகரில் ரஷ்ய படைகள் முன்னேறி வருவதால் இன்று இரவு முதல் அடுத்த 36 மணி நேரத்திற்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப் போவதாக நகர மேயர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ரஷ்ய அரசு பத்திரிகையாளர் நிறுவனமான ஸ்புட்னி கூறுகையில், “உக்ரைன் பொதுமக்களுக்கு நோட்டா அமைப்பில் இணைய போவதில்லை என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஜெலன்ஸ்கி” தெரிவித்துள்ளார்.