Categories
மாநில செய்திகள்

குஷியோ குஷி…. “அடுக்குமாடி குடியிருப்புகளில் வீடு ரெடி”…. அமைச்சர் சொன்ன சூப்பர் தகவல்….!!!!

கடந்த ஆட்சியின் போது வீடுகளை பெறுவதற்கு ஒட்டுமொத்தமாக பணம் கட்ட வேண்டி இருந்த நிலையில், தற்போது வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையை 20 ஆண்டுகள் பிரித்து கட்டிக்கொள்ளலாம் என வீட்டு வசதித்துறை அமைச்சர் தகவல் தெரிவித்துள்ளார்.

குடிசை மாற்று வாரியத்தில், வீடு ஒதுக்கீடு பெற்றவர்கள் பணம் கட்டிய ஆதாரங்களை காண்பித்தால் உடனடியாக விற்பனை பத்திரம் வழங்கப்படும் என்று தமிழ்நாடு வீட்டுவசதி துறை அமைச்சர் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்துள்ள கொடிவேரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல் அணி சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது: “அடுக்குமாடி குடியிருப்புகளை பயனாளிகளுக்கு ஒதுக்குவதில் பல சிக்கல்கள் இருந்து வந்தது. இது குறித்து முதல்வர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது. பின்னர் பயனாளிகள் சுலபமாக வீடுகளை பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கடந்த ஆட்சியில் வீடுகள் பெற்ற உடன் ஒட்டுமொத்தமாக பணம் கட்ட வேண்டிய சூழ்நிலை இருந்தது. தற்போது வீடுகளுக்கு கொடுக்க வேண்டிய மொத்த தொகையை 20 ஆண்டுகாலம் பிரித்துக் கட்டிக்கொள்ளலாம்” என்று ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர். எனவே விரைவாக அந்த வீடுகள் பயனாளர்களுக்கு ஒதுக்கப்படும், எதிர்காலத்திலும் இந்த முறை கையாளப் படும். குடிசை மாற்று வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றவர்களுக்கு விற்பனை பத்திரம் வழங்குவதில் பல சிக்கல்கள் உள்ளது.

பத்திரம் வழங்குவதில், பத்திரம் பெறக்கூடிய தகுதி படைத்தவர்களுக்கு உடனடியாக பத்திரம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்து விட்டதாகவும், பணம் கட்டாமல் இருப்பவர்கள் பணத்தைச் செலுத்தினால் உடனே விற்பனை பத்திரம் கொடுக்கப்படும் எனவும் கூறினார். சில நபர்கள் பாதி தொகையை கட்டி விட்டு மீதி தொகையை வேறு நபர்களுக்கு விற்பனை செய்து விடுவதால் யாருக்கு விற்பனை பத்திரத்தை கொடுப்பது என்பதில் பல சிக்கல்கள் ஏற்படுவதாகவும், இதற்கு விரைவில் தீர்வு காணப்பட்டு விற்பனை பத்திரம் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

Categories

Tech |