Categories
உலக செய்திகள்

விளாடிமிர் புடினை சண்டைக்கு அழைத்த எலான் மஸ்க்…. ட்விட்டரில் நடந்த மோதல்…!!!

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு மீண்டும் எலான் மஸ்க் சவால் விடுத்திருக்கிறார்.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20வது நாளாக போர் தொடுத்துக் கொண்டிருக்கிறது. ரஷ்ய படைகள் தொடர்ந்து தாக்குதல் மேற்கொள்வதால் உக்ரைன் நாட்டின் தொலைதொடர்பும், இணையதள சேவைகளும் கடும் பாதிப்படைந்திருக்கிறது. எனவே, டெஸ்லா நிறுவனத்தினுடைய தலைமை செயல் அதிகாரியான எலான் மஸ்க்கிடம் உக்ரேன் இணைய சேவைகள் வழங்குமாறு கோரிக்கை வைத்திருந்தது.

அதன்படி, எலான் மஸ்க் உக்ரைன் நாட்டிற்கு தன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார் லிங்க் செயற்கைகோளின் மூலமாக இணைய சேவை அளிப்பதாக உறுதியளித்தார். அதன்பின்பு அவர்  தன் ட்விட்டர் பக்கத்தில் நேற்று, “நான் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு நேருக்கு நேராக போர் நடத்த சவால் விடுக்கிறேன். இந்த மோதல்களுக்கான பந்தயம் உக்ரைன். இந்த மோதலுக்கு தயாரா? என்று புடினை குறிப்பிட்டு பதிவிட்டிருக்கிறார்.

இதற்கு ரஷ்ய நாட்டின் விண்வெளி துறைக்கான இயக்குனர் டிமிட்ரி ரோகோசின், “குட்டி பிசாசே, பலவீனமாக இருக்கும் நீ முதலில் என்னோடு போட்டி போடு” என்று குறிப்பிட்டிருக்கிறார். இதற்கு பதிலடியாக எலான் மஸ்க் மீண்டும் ஒரு சவால் விடுத்திருக்கிறார்.

அதில், அதிபர் விளாடிமிர் புடின் கரடியின் மீது அமர்ந்திருக்கும் புகைப்படத்தையும், தான் பிளேம் தி ரோவரை வைத்திருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டு, பேச்சுவார்த்தை நடத்த நீங்கள் கடுமையான நபர். சரி, நீங்கள் 10% அதிகமாக பணம் வாங்கி கொள்ளுங்கள். உங்கள் போராளியை தேர்ந்தெடுங்கள் அவர் தன் கரடியையும் போருக்கு வரவைக்கலாம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

Categories

Tech |