Categories
உலக செய்திகள்

உக்ரைன் தலைநகரை நெருங்கிய ரஷ்யப்படைகள்… அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தாக்குதல்…!!!

ரஷ்ய படைகள் உக்ரைன் நாட்டின் தலைநகரான கீவ்வின் மையப் பகுதியை நெருங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ந்து 20ஆம் நாளாக கடுமையாக போர் தொடுத்து வருகிறது. நேற்று ரஷ்யப்படைகள் அதிகாலை நேரத்தில் 15 மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடத்தில் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தி தரைமட்டமாக்கி இருக்கிறது. மேலும், தலைநகர் கீவில் இருக்கும் உக்ரைன் நாட்டின் மிகப்பெரிய விமான உற்பத்தி தொழிற்சாலையை ரஷ்யப் படைகள் அழித்திருக்கிறது.

போர் தீவிரமடைந்திருக்கும் நிலையில், உக்ரைன் அதிபர் போலந்து போன்ற பக்கத்து நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச புறப்பட்டிருக்கிறார். தற்போதுவரை 300க்கும் அதிகமான மருத்துவமனைகளை ரஷ்யப்படைகள் மொத்தமாக அழித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது ரஷ்ய ராணுவம் கீவ் நகரின் மையப் பகுதியிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரத்தில் முகாமிட்டிருக்கின்றன என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

எனவே, சில தினங்களில் தாக்குதல் உச்சகட்டத்தை அடைந்து தலைநகரை ஆக்கிரமிக்க தீவிரமான போர் நடைபெறும் என்று கூறப்படுகிறது. ரஷ்ய படைகள், தலைநகரை நெருங்கிவிட்டதால் தலைநகர் எப்போது வரை தாக்குப் பிடிக்கும் என்பது தெரியவில்லை. விரைவில் தலைநகரை ரஷ்யப்படைகள் வீழ்த்திவிடலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |