தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மாறன். இத்திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். இந்த படம் தற்போது பல விதமான நெகட்டிவ் விமர்சனங்களை பெற்று வருகின்றது. இப்படத்தில் மாளவிகா மோகனன் சமுத்திரக்கனி, காளி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
இந்த நிலையில் இப்படம் ஜீவா நடிப்பில் வெளிவந்த கோ படத்தை போல் இருப்பதாகவும், 2002ஆம் ஆண்டு சத்யராஜ் நடிப்பில் வெளிவந்த மாறன் படத்தின் காப்பி தான் என்றும் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர். தனுஷின் திரைப்படங்கள் தொடர்ந்து ஓடிடியில் வெளியாகி தோல்வி அடைந்து இருப்பதால் தனது கட்டாய வெற்றியை நோக்கி செயற்பட வேண்டிய நேரம் இது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.