44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடைபெற உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
44வது பிடே செஸ் ஒலிம்பியாட் சர்வதேச செஸ் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில் போர் சூழ்நிலை காரணமாக போட்டியை வெளியேறுவதாக சர்வதேச செஸ் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பை பெற பல நாடுகள் முயற்சித்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சீரிய முயற்சியினால் தமிழக அரசின் அனைத்து மட்ட அதிகாரிகள் மற்றும் இந்திய செஸ் கூட்டமைப்புக்குள் ஒருங்கிணைப்புடன் இந்த போட்டியை நடத்தும் வாய்ப்பு சாத்தியமாகியுள்ளது.
இந்நிலையில் 44 செஸ் ஒலிம்பியாட் போட்டி உத்தேசமாக ஜூலை 20-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை சென்னையில் நடைபெறுகிறது. இதுகுறித்து நேற்று இரவு முதல் அமைச்சர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவின் தலைநகரான சென்னையில் நடைபெற இருப்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது தமிழகத்திற்கு பெருமையான நிகழ்வு. உலகெங்கிலுமிருந்தும் வரும் ராஜாக்களும், ராணிகளும் சென்னை நகரம் அன்போடு வரவேற்கிறது” என குறிப்பிட்டிருக்கிறார்.