Categories
மாநில செய்திகள்

“ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில்”… வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பு?…. அரசு எடுக்கும் முடிவு என்ன?…..!!!!!

திருச்சி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு பக்தர்கள் வரும் தனியார் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூல் செய்துகொள்ளும் உரிமத்திற்கான ஏல அறிவிப்பை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இந்த முடிவுக்கு ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து ஆட்சேபணை தெரிவித்து கலெக்டர் சிவராசு, மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமானுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில், ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வருகிற வாகனங்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் கடந்த 2 வருடங்களாக நுழைவு கட்டணம் வசூலிக்கும் முறை ரத்து செய்யப்பட்டிருந்தது.

தற்போது மாநகராட்சி நிர்வாகம் நுழைவு கட்டணம் வசூலிக்கும் உரிமத்துக்கு ஏல அறிவிப்பு வெளியிட்டிருப்பது சட்டத்திற்கு புறம்பானதாகவும், கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இடையூறாக அமையும் என்றும் தெரிவித்துள்ளார். ஆகவே மக்களின் நலன் கருதி நுழைவு கட்டணம் வசூலிப்பதற்கு உரிமம் வழங்குவதை ரத்து செய்ய வேண்டும் என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் நீதி மய்யத்தின் மாவட்ட செயலாளர் கிேஷார்குமாரும் நுழைவுக் கட்டணம் வசூலிக்கும் முடிவை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

Categories

Tech |