சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தை ரூபாய் 139 கோடி மதிப்பில் புதுப்பிக்க தமிழக அரசின் சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
அந்த வகையில் மைதானத்தை புதுப்பிக்கவும், விரிவாக்கம் செய்யும்போதும் மரங்களை வெட்டக்கூடாது, நீர் நிலைகளில் கட்டடம் கட்டக்கூடாது, பொதுமக்கள் பாதிக்கும் விதமாக கட்டுமானம் இருக்கக்கூடாது என்று 18 நிபந்தனைகள் தமிழ்நாடு அரசுத் தரப்பில் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் 62,000 சதுர அடியில் இருந்து 77,000 சதுர அடியாக மைதானம் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இதன் வாயிலாக கூடுதலாக 36,000 பார்வையாளர்கள் அமரமுடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.