அமெரிக்காவின் பொருளாதார தடைகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சு தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ரஷ்யா மற்றும் அந்நாட்டு 11 ராணுவ உயர் அதிகாரிகள் மீது அமெரிக்காவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் “அமெரிக்காவின் முக்கிய பிரமுகர்கள், வெளியுறவு மந்திரி ஆன்டனி ஜே.பிளிங்கன், கூட்டு ராணுவ தளபதிகளின் தலைவர் எம்.மில்லே, ஜனாதிபதி ஜோ பைடன், பாதுகாப்பு மந்திரி எல்.ஆஸ்டின் மற்றும் பல்வேறு துறைகளின் தலைவர்கள் ரஷ்யாவில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிரான வெறுப்பை வெளிப்படுத்தும், தூண்டும் விதத்தில் மேலும் பல அமெரிக்க அதிகாரிகள், பிரமுகர்கள் தடை பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். இருப்பினும் ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ தொடர்பு அமெரிக்காவுடன் நீடிக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.