Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான கால அட்டவணையும் வெளியாகியது.

இந்நிலையில் தமிழகத்திலுள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி வசதி தேவைப்படுகிறது. இதற்காக contribute.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக அரசு பள்ளிகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை பொதுமக்களே நேரடியாக உதவி செய்ய பள்ளிக்கல்வித்துறை வழிவகை செய்துள்ளது. அதன்படி இணையதளத்தில் மாவட்டத்தை தேர்வு செய்து, உதவியை எதிர்பார்க்கும் பள்ளியை தேர்வு செய்து, பிறகு குறிப்பிட்ட உள்கட்டமைப்பு பணிகளையும் தேர்வு செய்யலாம்.

Categories

Tech |