Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வாக்கிங் சென்ற போது ஏற்பட்ட சோகம்… சிமெண்ட் லாரி மோதி… முன்னாள் வங்கி ஊழியர் பலி.!!

வாளாடி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர்  உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், லால்குடி அருகிலுள்ள  வாளாடி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியரான 65 வயது வயதான சங்கரலிங்கம் என்பவரும், அதே பகுதியை சேர்ந்த நெல் வியாபாரியான 60 வயதான தனசாமி என்பவரும் கபிரியேல்புரம் பகுதியில் வாக்கிங் சென்று கொண்டிருந்தார்கள். பின் மோட்டார் வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருக்கும்போது அந்த வழியாக வந்த  சிமெண்டு லாரி எதிர்பாராதவிதமாக வாகனத்தின் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே சங்கரலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தார். அதில் படுகாயமடைந்த தனசாமியை  திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து லால்குடி காவல்துறை இன்ஸ்பெக்டர் பிரபு வழக்குப்பதிந்து விபத்திற்கு காரணமான லாரி டிரைவர் விருத்தாசலத்தை  சேர்ந்த 32 வயதான வேல்முருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Categories

Tech |