நெல்லை களக்காடு அருகே நீராவி முருகன் என்ற ரவுடி ஒருவர் போலீஸ் என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய முருகனை தனிப்படை காவல்துறையினர் சுட்டுக் கொன்றனர். தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த முருகன் மீது ஆள்கடத்தல் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட வழக்குகள் இருந்தன. தூத்துக்குடி புதியம்புத்தூரில் உள்ள நீராவி தெருவில் வசித்து வந்ததால் அவருக்கு இந்த பெயர் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Categories