Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

ஆலங்குளத்தை புதிய கல்வி மாவட்டமாக கொண்டு வரனும்… கலெக்டரிடம் எம்.எல்.ஏ கோரிக்கை…!!!

ஆலங்குளத்தை புதிய கல்வி மாவட்டமாக கொண்டு வர வேண்டும் என்று எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் தென்காசி மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.

தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தர்ராஜை சந்தித்து எம்.எல்.ஏ மனோஜ் பாண்டியன் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் தெரிவித்திருப்பது, ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சிறுசிறு அலுவலகங்காக பிரிந்து கட்டிடங்கள் இடிந்து காணப்படுகின்றன. இதனால் இடப் பற்றாக்குறை ஏற்படுகிறது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், அலுவலர் குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றை புதிதாக அமைத்து தர வேண்டும்.

மேலும்  தென்காசி, சங்கரன்கோவில், கல்வி மாவட்டங்கள் இருப்பதுபோல் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு, மாணவர்கள் படிப்பதற்கு எளிதாக இருக்கும் வகையில், போக்குவரத்து நேரத்தை குறைக்கும் பொருட்டு, அலுவலரின் பணிச்சுமையை குறைப்பதற்காகவும், ஆலங்குளம் ஒன்றியம்,  பேரூராட்சி, கடையம் ஒன்றியம், கீழப்பாவூர் ஒன்றியம் ஆலங்குளம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் ஆகியவற்றை முறையாக தென்காசி மற்றும் சங்கரன்கோவில் கல்வி மாவட்டத்தில் இருந்து பிரித்து ஆலங்குளத்தை தனி கல்வி மாவட்டமாக  கொண்டு வர வேண்டும்.

கீழப்பாவூர் ஒன்றியத்தில் உள்ள கரும்பனூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் புதிய தார்சாலை அமைத்து தர வேண்டும் மற்றும் கடையம் ஒன்றியம் பொட்டல்புதூர் முதல் தெற்கே ஒரு பாதையாக மடத்தூர் வரை செல்லும் சாலையை ஒழுங்குபடுத்தி  தர வேண்டும்.மேலும் ஆலங்குளம் தாலுகா மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் மோட்டார் வாகனத்திற்கு லைசன்ஸ் எடுக்க, புதிய வாகனம் பதிவு செய்ய போன்ற பல்வேறு தேவைகளுக்கு தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு செல்ல வேண்டி இருப்பதால் ஆலங்குளத்தில் புதிய வட்டார போக்குவரத்து அலுவலகம்  இந்த ஆண்டு அமைத்து தர வேண்டும். என்று அந்த மனுவில் எம்.எல்.ஏ கூறியுள்ளார்.

Categories

Tech |