Categories
உலக செய்திகள்

உக்ரைனில் உச்சமடையும் போர்…. கீவ் நகருக்கு சென்ற 3 நாட்டு பிரதமர்கள்…!!!

உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்து வரும் நிலையில் மூன்று ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த தலைவர்கள் கிவ் நகரத்திற்கு சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் நாட்டின் தலைநகரில் ரஷ்ய படைகளின் ஆதிக்கம் அதிகரித்திருக்கிறது. ரஷ்ய படையினர், தலைநகர் கீவை குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அதிர வைத்து வருகிறார்கள். அந்நகரின் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு குண்டுவெடிப்பு தாக்குதல்களால் பெரும் சேதமடைந்திருக்கிறது.

இந்நிலையில், நேட்டோ அமைப்பில் இருக்கும் சுலோவேனியா, போலந்து மற்றும் செக் குடியரசு ஆகிய 3 நாடுகளின் பிரதமர்கள் உக்ரைனிற்கு நேற்று சென்றிருக்கிறார்கள். அந்நாட்டிற்கு ஆதரவு தெரிவிப்பதற்காக ஐரோப்பிய கூட்டமைப்பின் பணிக்காக அங்கு சென்றுள்ளதாக கூறியிருக்கிறார்கள். இவர்கள் உக்ரைன் நாட்டின் அதிபரையும் பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

செக் குடியரசின் பிரதமரான பீட்டர் பியாலா தெரிவித்திருப்பதாவது, இந்த பயணம், உக்ரைன் நாட்டிற்கும், அதன் சுதந்திரத்திற்கும் ஐரோப்பிய கூட்டமைப்பினுடைய ஆதரவை உறுதியாக வெளிப்படுத்துவதற்கானது” என்று கூறியிருக்கிறார்.

Categories

Tech |