Categories
மாநில செய்திகள்

ஏப்ரல் 28 ஆம் தேதி முதல்….. மதுரை டூ காசிக்கு சுற்றுலா ரயில்…. வெளியான அறிவிப்பு…..!!!!!

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் சார்பாக மதுரையில் இருந்து திருச்சி, கரூர், ஈரோடு, சேலம், சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையம் வழியே காசி வரை சுற்றுலா ரயில் ஏப்ரல் 28 ஆம் தேதி இயக்கப்படுகிறது. இந்த ரயில் ஏப்ரல் 28 அதிகாலை மதுரையில் இருந்து புறப்படும். தமிழ் புத்தாண்டில் முதன்முதலாக வரும் அமாவாசை அன்று கயாவில் முன்னோர்களுக்கு சிறப்பு தர்ப்பணம் செய்யலாம்.

இதையடுத்து காசியில் கங்கா ஸ்நானம் செய்து விஸ்வநாதர், விசாலாட்சி, அன்னபூரணி தெய்வங்களை தரிசனம் செய்யலாம். மேலும் அலகாபாத் திரிவேணி சங்கமம் மற்றும் அட்சய திரிதியை அன்று ஹரித்வாரில் கங்கையில் நீராடலாம். மானச தேவியை தரிசித்த பிறகு ஆக்ரா தாஜ்மஹால், மதுரா கிருஷ்ண ஜென்மபூமி, டில்லியை சுற்றிப் பார்க்கலாம். அதனை தொடர்ந்து ரயிலில் திரும்பி வரும்போது ஸ்ரீ ராமானுஜர் சமத்துவ சிலையை தரிசிக்கலாம்.

இதற்கிடையில் ரயிலில் குளிர்சாதன 3 அடுக்கு படுக்கை வசதி, சுற்றுலா தலங்களில் குளிர்சாதன அறைகளும் தேவைக்கேற்ப ஏற்பாடு செய்யப்படும். அவ்வாறு 11 நாள் சுற்றுலாவுக்கு ரூபாய் 19ஆயிரத்து 900, ரூ.26ஆயிரத்து 500, ரூ.36ஆயிரத்து 900 கட்டணம் வசூலிக்கப்படும். பயணக் கட்டணம், தென்னிந்திய சைவ உணவு தங்கும் வசதி, உள்ளூர் பேருந்து வசதி இந்த கட்டணத்தில் அடங்கும். இதில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் எல்.டி.சி. வசதியை பயன்படுத்தலாம். மேலும் கூடுதல் விபரங்களுக்கு 90031 40714 / 82879 32122. www.irctctourism.com இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

Categories

Tech |