Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் வெப்பநிலை உயரும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…!!!!

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக கூடும். இதுபற்றி சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கூறியபோது, தமிழகம் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பல இடங்களில் புதன் வியாழன் ஆகிய இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் பூமத்திய ரேகையை ஒட்டி இந்திய பெருங்கடல் மற்றும் மேற்கு வங்க கடல் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வும் தமிழக கடலோர மாவட்டங்கள மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மார்ச் 18 ,19 தேதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி செல்சியஸ் முதல் மூன்று டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும். பூமத்திய ரேகையை ஒட்டி உள்ள இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்தத்தாழ்வு  உருவாக வாய்ப்பிருக்கிறது. இதன் காரணமாக பூமத்திய ரேகை இந்திய பெருங்கடல் மற்றும் தென்மேற்கு பருவ கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே  மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். அதனால் இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் புதன்கிழமை வரை செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Categories

Tech |