Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய எச்சரிக்கை… அமைச்சர் அதிரடி அறிவிப்பு…!!!!

தனியார் பள்ளிகளுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா  காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாத இறுதியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப் பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று  குறைந்த சூழலில் கடந்த நவம்பர் மாதத்தில் மீண்டும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டது. தென் ஆப்பிரிக்காவில் பரவிய  ஓமைக்ரான்  தொற்று காரணமாக தமிழகத்தின் மூன்றாம் அலையின்  தாக்கம்  தொடங்கியது.அதனால் கொரோனாவை  கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.

தற்போது தொற்று பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகளை  அரசு அறிவித்துள்ளது. மேலும் கடந்த பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகளிலும் திறக்கப்பட்டுள்ளது.  அத்துடன் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது.

அதன்படி கடந்த மாதம் அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர், கணினி பயிற்றுனர் உள்ளிட்ட பணிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு நடத்தப் பட்டிருந்தது.இத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நேரடி பணி நியமன ஆணைகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்கினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் இவர் கூறியதாவது, தமிழகத்தில் 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களின் தொடக்கக் கல்விக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.  அத்துடன் தனியார் பள்ளிகளில் ஒரு சில மாணவர்களால் கல்வி கட்டணம் செலுத்த  முடியாமல் உள்ளனர். அந்த மாணவர்களை வகுப்பறைக்கு வெளியில் நிற்க வைக்க கூடாது என்று அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அறிவுறுத்தி இருக்கிறார்.

Categories

Tech |