Categories
உலக செய்திகள்

வாங்க வாங்க…. இந்தியாவுடனும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விருப்பம்…. பிரபல நாட்டின் அதிரடி அறிவிப்பு….!!!

சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மியான்மர் மேற்கொண்டுள்ளது.

மியான்மர் இந்தியாவுடனான எல்லை வர்த்தகத்துக்கான இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொள்ள உள்ளது. இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை மியான்மர் தகவல் தொடர்பு துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்த அறிக்கையில் “எல்லை வர்த்தகத்தை எளிமை படுத்துவதற்காக சீனா மற்றும் தாய்லாந்து நாடுகளுடன் இரு நாட்டு நாணயமாற்று ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளோம். இதேபோன்று தற்போது இந்தியாவுடனும் இந்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறோம்” என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |