Categories
மாநில செய்திகள்

ரூ.7,500 கோடியில் விரிவாக்க திட்டம்…. எங்கென்னு தெரியுமா?…. வெளியான அறிவிப்பு…..!!!!!

பிரதமரின் கதி சக்தி திட்டத்தின் கீழ் தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் ரூபாய் 7,500 கோடியில் வெளித்துறைமுகம் விரிவாக்க திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது என்று அதன் தலைவர் டி.கே.ராமச்சந்திரன் கூறினார். இந்த திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அண்மையில் தொடங்கினார். அந்த வகையில் நாட்டில் அனைத்து பொருளாதார மண்டலங்களும் ஒரே தளத்தின் கீழ் இணைக்கப்பட இருக்கிறது.

இத்திட்டம் தொடர்பாக தூத்துக்குடியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணைய தலைவர் டி.கே. ராமச்சந்திரன், துணைத்தலைவர் பீமல்குமார், சுங்கத்துறை ஆணையர் தினேஷ் சக்கரவர்த்தி, தென்னக ரயில்வே கோட்ட கூடுதல் மேலாளர் ரமேஷ்பாபு, இந்திய துறைமுக ரயில் கழக கூடுதல் பொது மேலாளர் ரமேஷ் பாபு, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குனர் சங்கர், விமான நிலைய இயக்குனர் சுப்பிரமணியன் உள்ளிட்டோர் ஆலோசனை மேற்கொண்டனர்.

மேலும் துறைமுக ஆணைய தலைவர் கூறியிருப்பதாவது, “மேற்கத்திய நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் சரக்கு போக்குவரத்திற்கு அதிக செலவாகிறது. போக்குவரத்து செலவை குறைக்கும் அடிப்படையில் 16 அமைச்சகங்களை ஒருங்கிணைத்து கதிசக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. தூத்துக்குடியை ஸ்மார்ட் துறைமுகமாக மாற்றி 2000 ஏக்கரில் பல்வேறு தொழிற்சாலைகள் கொண்டுவரப்பட இருக்கின்றன. இதனிடையில் சரக்கு பெட்டகங்களை கண்காணிக்கும் ஸ்கேனிங் வசதி ரூபாய் 42 கோடியில் அமைக்கப்படுகிறது.

அதனை தொடர்ந்து துறைமுகத்தில் கப்பல் மிதவை ஆழத்தை 16 மீட்டராக உயர்த்துவது, 9-வது கப்பல் தளத்தை சரக்குப் பெட்டக தளமாக மாற்றுவது ஆகிய உள்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. அதன்பின் துறைமுகம் முழுவதும் பசுமை மின் உற்பத்தியை பயன்படுத்தும் அடிப்படையில் 100 மெகாவாட் திறன்கொண்ட, காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின்சக்தி திட்டம் செயல்படுத்தப்படும். மேலும் 4 லட்சத்து 10 ஆயிரம் மில்லியன் சரக்கு பெட்டகங்கள் கையாளும் அடிப்படையில் 1முதல் 4 வரையிலான தளங்கள் சரக்கு பெட்டக தளங்களாக மாற்றப்பட இருக்கிறது” என்று அவர் கூறினார்.

Categories

Tech |