மணல் புயல் வீசியதால் பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டுள்ளனர்.
ஸ்பெயின் நாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் மணல் புயல் வீசி வருகிறது. இது சகாரா பாலைவனத்தில் இருந்து ஸ்பெயினை நோக்கி வருகிறதாம். இந்த மணல் புயலுக்கு செலியா என பெயரிடப்பட்டுள்ளது.
இந்த புயலால் காற்றின் தரம் மிக கடுமையாக பாதிக்கப்பட்டதோடு மக்களும் அவதிக்குள்ளாயினர். இதனால் மாட்ரிட் நகரம் முழுவதும் புழுதி படிந்துள்ளது. மேலும் அங்குள்ள வாகனங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் அனைத்தும் புழுதியாக காணப்படுகின்றது. இதனை அங்குள்ள மக்கள் அனைவரும் சுத்தம் செய்து வருகின்றனர்.