மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட எஸ்.புதூர், உலகம்பட்டி, ஆரணிபட்டி, மாந்தாங்குடிபட்டி, நெடுவயல், கட்டுகுடிபட்டி, மேலவண்ணாரிருப்பு, ஆர்.பாலக்குறிச்சி, வாராப்பூர், குளத்துப்பட்டி, முசுண்டபட்டி, வலசைபட்டி, கரிசல்பட்டி, புழுதிபட்டி, தர்மபட்டி, செட்டிகுறிச்சி,நாகமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார். மேலும் மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்சாரம் தடை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.