Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்…. மாசி-பங்குனி திருவிழா…. திரளான பக்தர்கள் தரிசனம்….!!

முத்துமாரியம்மன் கோவிலில்  திருவிழா நடைபெற்று வருகிறது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மீனாட்சிபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி- பங்குனி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு கொடியேற்றத்துடன் மாசி-பங்குனி  திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த திருவிழாவின் முக்கிய நாளான நேற்று மாலை காப்பு கட்டி விரதம் இருந்த திரளான பக்தர்கள் முத்தாலம்மன் கோவிலில் இருந்து  அக்கினிச்சட்டி எடுத்து ஊர்வலமாக சுற்றி முத்துமாரியம்மன் கோவிலை வந்தடைந்தனர். அதன் பின்னர் முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இந்த திருவிழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |