இலங்கையில் அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கும் நிலையில் அதிபர் ராஜபக்சேவை பதவி விலகக்கோரி எதிர்க்கட்சி போராட்டம் நடத்தி வருகிறது.
இலங்கையில் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்ந்த நிலையில், அதிபர் பதவி விலகக்கோரி எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். கொரோனா போன்ற காரணங்களினால் இலங்கை, ஒவ்வொரு நாளும் நிதி நெருக்கடியைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பேருந்து கட்டணத்திலிருந்து உணவு பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்களுக்கான விலை கடுமையாக உயர்ந்திருக்கிறது.
இதனால் மக்கள் வறுமையில் வாடுகிறார்கள். இலங்கை அரசாங்கம் எதிர்கொண்டிருக்கும் நிதி நெருக்கடிக்கு பொறுப்பேற்றுக் கொண்டு, அதிபர் ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று கொழும்புவில் ஐக்கிய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம் நடத்திவருகிறது.