ஊட்டியில் காப்பீட்டு நிறுவனங்களை கண்டித்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டம், ஊட்டி ஸ்டேட்பேங்க் அருகில் உள்ள காப்பீட்டு நிறுவனம் முன்பாக தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற ஊழியர் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தபட்டது. நீலகிரி மாவட்ட தலைவர் மாதன் தலைமை தாங்கிய இந்த போராட்டத்தில் சங்கத்தில் உள்ள பல உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இதில் புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உயிர்காக்கும் சிகிச்சையை மேற்கொள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபின் முழு தொகையும் செலுத்த கட்டாயப்படுத்துவது, மருத்துவ குழு அங்கீகரிக்கும் சிகிச்சைக்கான தொகையை திரும்ப கொடுக்காமல் காப்பீட்டு நிறுவனங்கள் நிலுவையில் வைத்துக் கொள்வதை கண்டித்தும் போராட்டம் நடத்தபட்டது.