உக்ரைன் நாட்டின் கெர்சன் விமானதளத்தில் நின்ற ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள், உக்ரைன் படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின்மீது 21-ஆம் நாளாக ரஷ்யப் படைகள் தீவிரமாக தாக்குதல் மேற்கொண்டு வருகின்றன. நேற்று உக்ரைன் நாட்டின் கெர்சன் நகரை கைப்பற்றியதாக ரஷ்யப் படைகள் அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில், ரஷ்யா தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் கெர்சன் நகரில் இருக்கும் விமான தளத்தில் நின்ற ரஷ்யாவின் ராணுவ ஹெலிகாப்டர்களை உக்ரைன் இராணுவத்தினர் பீரங்கிகளை கொண்டு அழித்துள்ளனர்.
ரஷ்யாவின் ஹெலிகாப்டர்கள் தீப்பிடித்து எரியும் செயற்கைகோள் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இத்தாக்குதலில் 3 க்கும் அதிகமான ஹெலிகாப்டர்கள் உட்பட ராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.