Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காணாமல் போன சிறுமி…. பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. விசாரணையில் தெரிந்த உண்மை…!!

சிறுமியை கடத்தி சென்ற குற்றத்திற்காக கூலி தொழிலாளியை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

சென்னை மாவட்டத்திலுள்ள செங்குன்றம் பகுதியில் 17 வயது மாணவி வசித்து வருகிறார். இந்த சிறுமியை காணவில்லை என கடந்த 12-ஆம் தேதி பெற்றோர் செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சிறுமியை கூலி வேலை பார்க்கும் சந்தோஷ் என்பவர் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஆந்திர மாநிலத்தில் உள்ள நகரிக்கு கடத்தி சென்றது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காவல்துறையினர் சிறுமியை பத்திரமாக மீட்டனர். மேலும் காவல்துறையினர் சந்தோஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |