பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த 10 மாதங்களுக்கு முன்பு பீகாரை சேர்ந்த இளைஞர் மீது சிறுமியின் குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். இந்த நிலையில் மார்ச் 14 ஆம் தேதி அன்று மருத்துவமனையில் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இது தொடர்பாக காவல்துறையினர் கூறியதாவது “10 மாதங்களுக்கு முன் திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமிக்கு, இளைஞர் பாலியல் வன்புணர்வு கொடுத்துள்ளார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமியும், குற்றம் சாட்டப்பட்டவரும் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்ததாக சிறுமியின் தந்தை தெரிவித்துள்ளார். தற்போது சம்மந்தப்பட்ட இளைஞரை தேடி வருகிறோம். இந்த நிலையில் தான் சிறுமிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.