Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டுத் தீயை அணைக்க…. எதைச் செய்யலாம், செய்யக்கூடாது…. இளைஞர்களுக்கு கொடுக்கப்படும் பயிற்சி….!!

ஊட்டியில் உள்ள தீயணைப்பு நிலையத்தில் காட்டுத்தீயை அணைப்பது குறித்து இளைஞர்களுக்கு  சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வளம் மற்றும் பருவநிலை  மாற்ற அமைச்சகம் மற்றும் அதன்கீழ் செயல்படும் சுற்றுச்சூழல் கல்வி மையம் சார்பில் வனத்தீ மேலாண்மை  நீலகிரி மாவட்டத்தில்  நேற்று முதல் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. முதல்  1½ மாத பயிற்சியில்  பல்லுயிர்ப் பெருக்கம், காடுகளின் தன்மை, பல்வேறு நாடுகளில் ஏற்படும் காட்டுத் தீயின் தன்மை, இந்தியாவில் காட்டுத் தீயின் தன்மை, அதனை எவ்வாறு  கட்டுப்படுத்துவது குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

பயிற்சியாளர்களுக்கு காட்டுத்தீ ஏற்பட்டால் அதனை  எவ்வாறு அணைப்பது குறித்த செயல் முறை விளக்கம் நேற்று  ஊட்டி தீயணைப்பு நிலையத்தில் அளிக்கப்பட்டது. இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி பிரேமானந்தன் பேசும்போது,காட்டுத் தீ ஏற்பட்டால் காற்று வீசும் எதிர்திசையில் என்று தீயை அணைக்க கூடாது இந்நிலையில் அவ்வாறு அணைத்தால் நம் மீது தீ பரவி விடும்.

அதற்கு மாறாக காற்று வீசும் திசைக்கு நேராக நின்று தீயை அணைக்க வேண்டும். மண்வெட்டி மூலம் மண்ணை  எடுத்து எரியும் தீ மீது போட்டு அணைக்கலாம் மற்றும்  செடிகளை கொண்டு தீயை அழுத்தி அணைக்கலாம் என்று  கூறினார். மேலும் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது, தீயை அணைக்கும் போது உயிர், உடைமைகளை பாதுகாப்பது, பாதுகாப்பாக மீட்பு பணியில் ஈடுபடுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.

Categories

Tech |