Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

“நான் தண்ணீர் எடுத்துட்டு வரேன்” திடீரென மாயமான இளம்பெண்…. தேடும் பணியில் போலீஸ்….!!

நகை கடைக்கு தாயாருடன் சென்ற இளம்பெண் திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரில் 27 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்நிலையில் அந்த இளம்பெண் செய்யாறில் வசிக்கும் தனது உறவினர்கள் வீட்டிற்கு தனது தாயாருடன் சென்றிருந்தார். அப்போது இளம் பெண்ணுக்கும் உறவினர் மகனுக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இந்நிலையில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் செய்த போது திருமண நகை வாங்க செய்யாறு டவுனில் உள்ள நகைக் கடைக்கு இளம்பெண் தனது தாயாருடன் சென்றுள்ளார்.

அப்போது இளம்பெண் தன் தாயாரிடம் அருகில் உள்ள கடைக்கு சென்று தண்ணீர் எடுத்து வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார். அதன் பின் நீண்ட நேரமாகியும் இளம்பெண் நகை கடைக்கு திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த தாயார் இளம்பெண்ணை பல இடங்களிலும் தேடினர். ஆனால் அவர் கிடைக்காததால் இது குறித்து செய்யாறு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

Categories

Tech |