Categories
மாநில செய்திகள்

இளைஞர்களே…. தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி… மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்…. மிஸ் பண்ணிடாதீங்க…..!!!!!

தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில் மக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். அத்துடன் படித்து முடித்த இளைஞர்களும் வேலை இன்றி தவித்து வந்தனர். கடந்த வருடம் இறுதியில் கொரோனா தாக்கம் குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து இருந்தது. அதன்படி பள்ளிகள், கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டு பழைய நிலைக்கு திரும்பி இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு குறித்து அண்மையில் அறிவித்தது. இந்நிலையில் தற்போது டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ போன்ற தேர்வுகளுக்கான தேதிகளை அறிவித்து அதற்கான வேலைகளையும் செய்து வருகிறது.

அதன்பின் குரூப் 4 தேர்வுக்கான தேதியையும் தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. இவ்வாறு வேலை இன்றி தவிக்கும் இளைஞர்களுக்கு அரசின் சார்பாக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தினாலும், தனியார் துறையும் தனது பங்கிற்கு வேலை வாய்ப்புகளை வாரி வழங்கி வருகிறது. அந்த வகையில் மார்ச் 19-ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாகையில் நடைபெற இருக்கிறது. நாகை இஜிஎஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் மார்ச் 19ஆம் தேதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெறும். இதில் 18 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்கள் கலந்துகொள்ளலாம். 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, டிகிரி, தையல் கலை பயிற்சி பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம். www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம்.

Categories

Tech |