டிரைவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள எடக்கல் பகுதியில் தில்லைஆனந்தன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டிரைவராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் தில்லைஆனந்தன் வீட்டில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் தில்லை ஆனந்தனை உடனடியாக மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு தில்லை ஆனந்தனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த வாணாபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.